CRIME
காதலியை துடிக்க துடிக்க கொன்று.. “சடலத்தோடு உடலுறவு” பின் துண்டுத்துண்டாக வெட்டி சூட்கேசில் அடைத்து.. காதலன் கொடுத்த பகீர் வாக்குமூலம்… 10 ஆண்டுகால மர்மம் விலகியது..!!
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு 19 வயதான மார்கன் பாயர் என்ற நடனப் பெண் திடீரென மாயமானார். சவுத் டகோட்டாவில் இருந்து அட்லாண்டா நகருக்குக் குடிபெயர்ந்த சில நாட்களிலேயே அவர் காணாமல் போனதால், இந்த வழக்கு பல ஆண்டுகளாகத் துப்பு துலக்கப்பட முடியாத ஒரு மர்மக் கொலை வழக்காக நீடித்தது. கடந்த 2023ஆம் ஆண்டு வரை எந்தவொரு தடயமும் கிடைக்காத நிலையில், கிட்டத்தட்ட 10 ஆண்டுகால தீவிரப் புலனாய்விற்குப் பிறகே அவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு, தற்போது குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இந்தக் கொடூரக் கொலையை மார்கனின் தோழியான கேட்லின் கோபிள் (30) மற்றும் அவரது கள்ளக்காதலன் ஜொனாதன் அலெக்சாண்டர் வாரன் (34) ஆகிய இருவருமே திட்டமிட்டுச் செய்துள்ளனர் என்பது விசாரணையில் அம்பலமானது. மார்கனைத் தங்களது வீட்டிற்கு அழைத்துச் சென்று கழுத்தை நெரித்துக் கொலை செய்த இந்த ஜோடி, அதன்பின்னர் சடலத்தை துண்டு துண்டாக வெட்டி, ஒரு சூட்கேசில் வைத்துப் கொல்லைப்புறத்தில் எரித்துச் சாம்பலாக்கியுள்ளனர். கொலையாளிகள் இருவருக்கும் தொடர் கொலைகாரர்கள் மற்றும் சாத்தானிய வழிபாடுகளில் இருந்த தீராத மோகமே இத்தகைய கொடூரச் செயலைச் செய்யத் தூண்டியது என அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் நிரூபித்தனர்.
இந்த வழக்கில் ஏற்கனவே குற்றத்தை ஒப்புக்கொண்ட காதலன் அலெக்சாண்டர் வாரனுக்கு 2024ஆம் ஆண்டே ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, வழக்கை எதிர்கொண்டு வந்த காதலி கேட்லின் கோபிளும் குற்றவாளி என நியூட்டன் கவுண்டி நீதிமன்ற நடுவர் குழுவால் உறுதி செய்யப்பட்டு, அவருக்கு எஞ்சிய வாழ்நாள் முழுவதும் பரோல் வழங்கி வெளியில் வர முடியாத அளவிற்கான ‘பரோல் இல்லா ஆயுள் தண்டனை’ வழங்கி நீதிபதி அதிரடி தீர்ப்பளித்துள்ளார். பத்தாண்டுகளாகத் தனது மகளின் மரணத்திற்கு நீதி கேட்டுப் போராடிய மார்கனின் குடும்பத்தினருக்கு இந்தத் தீர்ப்பு ஒருவழியாக ஆறுதலைத் தந்துள்ளது.
