CINEMA
சூர்யாவின் கண்கள் அப்படி இருக்கும்…. ரசிகரின் கேள்விக்கு மாளவிகா மோகனன் நச் பதில்….!!

நடிகை மாளவிகா மோகனன் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினியின் பேட்ட படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தின் வெற்றிக்கு பிறகு மாஸ்டர் திரைப்படத்தில் நடித்தார். மாஸ்டர் படமும் ஹிட்டானதால் தமிழ் சினிமாவில் நட்சத்திர நாயகியாக வலம் வந்தார். தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் தங்கலான் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ஆர்த்தி என்ற படத்தில் இவர் நடிக்கிறார் . இந்த படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் எக்ஸ் தளத்தில் சூர்யாவோடு நடிப்பீர்களா? என்று ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த மாளவிகா மோகனன், நடிகர் சூர்யா மிகவும் இனிமையானவர். அவரின் கண்கள் அழகாக பல பாவனைகளை வெளிப்படுத்தக் கூடியவை .விரைவில் அவரோடு இணைந்து பணியாற்றி விரும்புகிறேன் என்றும், கங்குவா திரைப்படம் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துகிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.