LATEST NEWS
ஐயோ இப்படி ஒரு கொடுமையை தாங்க முடியாம தான் தற்கொலை செய்தாரா?.. நடிகை அபர்ணா நாயரின் தற்கொலை வழக்கில் திடுக்கிடும் தகவல்..!!

கேரளாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர்தான் அபர்ணா நாயர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவனந்தபுரத்தில் உள்ள தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவர் சஞ்சீத் என்ற நபரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவருக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இதனிடையே நடிகை அபர்ணா நாயகரின் திடீர் தற்கொலை குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் பல புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதாவது அபர்ணாவின் தங்கைக்கும் சஞ்சித்துக்கும் இடையே இரண்டு வருடங்களுக்கு முன்பு தகாத உறவு இருந்த நிலையில் அபர்ணா போலீசில் புகார் அளிக்க அவரது கணவரை கைது செய்துள்ளனர். அதன் பிறகு சிறையில் இருந்து வெளியே வந்த அவர் நாவை பழிவாங்கும் நோக்கத்தில் தினமும் குடிபோதையில் வந்து தகராறு செய்தது மட்டுமல்லாமல் சினிமாவில் நடிப்பதற்கு தடை விதிக்கவும் கூறியுள்ளார்.
இதனால் நடிப்பை நிறுத்திய அபர்ணா மருத்துவமனையில் வரவேற்பாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இருந்தாலும் தினந்தோறும் குடித்துவிட்டு வந்து அவரது கணவர் தொல்லை தந்ததால் தற்கொலை முடிவு எடுத்ததாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதே சமயம் தனது மகள் தற்கொலைக்கு காரணம் சஞ்சித் என அபர்ணாவின் தாயார் புகார் அளித்தது மட்டுமல்லாமல் அபர்ணாவை பாட்டிலால் தலையில் அடித்ததாக அவரது மகளும் சஞ்சித் மீது புகார் அளித்துள்ளார். இதனால் பரபரப்பான திருப்பங்களுடன் அபர்ணாவின் கணவர் கைது செய்யலாம் என கூறப்படுகிறது.