LATEST NEWS
“ரேஷன் அரிசியில் கை வச்சா தவெக கதை முடிஞ்சிடும்..!” மார்க்சிஸ்ட் சண்முகம் விடுத்த அதிரடி எச்சரிக்கை… தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு..!!!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் முக்கிய நிர்வாகி சண்முகம், தவெக அரசுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். சமீபத்தில் தவெக அமைச்சர் செங்கோட்டையன், “ரேஷன் அரிசி ஆடு மாடுகளுக்குத் தீவனமாகப் பயன்படுத்தப்படுகிறது” என்று பேசியுள்ளது பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய சண்முகம், ஏழை எளிய லட்சக்கணக்கான மக்களின் பசியைப் போக்கி, அவர்களின் உயிரைக் காப்பாற்றிக் கொண்டிருப்பது இந்த ரேஷன் அரிசிதான் என்பதைத் தவெக அரசு மறந்துவிடக் கூடாது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், ஏழைகளின் வாழ்வாதாரத்தோடு விளையாடும் வகையில் ரேஷன் அரிசி விவகாரத்தில் தவெக அரசு கை வைத்தால், அக்கட்சியின் அரசியல் கதை முடிந்துவிடும் என்று சண்முகம் மிகக் காரசாரமாக எச்சரித்துள்ளார். மக்களின் மிக முக்கியமான அடிப்படைத் தேவையாக இருக்கும் ரேஷன் விநியோகத் திட்டத்தில் தவெக அரசு மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும், இதுபோன்ற தேவையற்ற அவதூறுப் பேச்சுகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். தவெக மற்றும் சிபிஎம் இடையே எழுந்துள்ள இந்த விவாதம் தற்பொழுது தமிழக அரசியல் களத்தில் புதிய பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
