POLITICS
“விஜய் பிரதமர்னு சொன்னா நாங்க சும்மா இருக்கணுமா..?!” ராகுல் காந்திக்காகப் பதவிகளைத் தூக்கியெறியத் துணிந்த காங்கிரஸ் அமைச்சர்கள்… தவெகவுக்குப் பேரதிர்ச்சி.. தமிழக அரசியல் உச்சக்கட்ட பரபரப்பு..!!
தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், “2029-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக ஏற்காவிட்டால் காங்கிரஸ் அமைச்சர்கள் இருவரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்வோம்” என்று அமைச்சர் ராஜேஷ்குமார் பேசிய அதிரடிப் பேச்சு தற்பொழுது முதலமைச்சர் விஜய்க்குப் பேரதிர்ச்சியை அளித்துள்ளது. தற்போதைய முதலமைச்சர் விஜய் தான் இந்தியாவின் ‘நாளைய பிரதமர்’ என்று தவெக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் சிலர் தொடர்ச்சியாக மேடைகளில் முழங்கி வருகின்றனர். தவெகவினரின் இந்த அதிரடிப் பிரதமர் முழக்கத்தால் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியின் தலைமை கடும் அதிருப்தியிலும் கோபத்திலும் இருப்பதாகத் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரவலாகப் பேசப்பட்டு வந்தது.
அந்தத் தொடர் அதிருப்தியின் அதிகாரப்பூர்வ வெளிப்பாடே, தற்பொழுது அமைச்சர் ராஜேஷ்குமார் தவெக கூட்டணிக்கு விடுத்துள்ள இந்த அதிரடிச் சமிக்ஞை மற்றும் எச்சரிக்கை என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். 2029-ல் ‘இந்தியா’ கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்திதான் முன்னிறுத்தப்படுவார் என்று காங்கிரஸ் தரப்பு திட்டவட்டமாகக் கூறிவரும் நிலையில், அதற்குத் தவெக முட்டுக்கட்டை போட்டால் கூட்டணியை முறித்துக் கொண்டு பதவிகளைத் தூக்கியெறியவும் தயங்கமாட்டோம் என்ற பாணியில் அமைச்சர் பேசியுள்ளது புதிய அரசியல் பூகம்பத்தைக் கிளப்பியுள்ளது. தவெக மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்குள் புகைந்து வந்த இந்தத் தலைமைப் போட்டி தற்பொழுது வெளிப்படையான மோதலாக உருவெடுத்துள்ளது.
