LATEST NEWS
ஐயோ கடவுளே.. “புறப்பட்ட 15-வது நிமிடமே புகுந்த மரண வெள்ளம்!” 270 பயணிகளுடன் நடுக்கடலில் மூழ்கிய சொகுசு படகு… நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்..!!
சைப்ரஸின் வடக்குக் கடற்கரைப் பகுதியில் சுமார் 270 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் சென்ற ‘கேட்ரமரன்’ வகை படகு ஒன்று கடலில் கவிழ்ந்து மூழ்கியதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். கைரேனியா துறைமுகத்தில் இருந்து துருக்கியின் தாசுசு துறைமுகத்திற்குச் சென்று கொண்டிருந்த இந்த படகு, மோசமான வானிலை காரணமாகப் புறப்பட்ட 15 நிமிடங்களிலேயே தண்ணீருக்குள் மூழ்கத் தொடங்கியுள்ளது. இந்த விபத்து குறித்துத் தகவல் அறிந்து வந்த மீட்புக் குழுவினர் இதுவரை 237 பேரைப் பத்திரமாக மீட்டுள்ள நிலையில், மாயமான மேலும் 22 பேரைத் தேடும் பணி 500 மீட்டர் ஆழமுள்ள கடற்பகுதியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்தக் கொடூரப் படகு விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், விசாரணையின் ஒரு பகுதியாகப் படகின் கேப்டன் உட்பட 8 பேரைத் தடுத்து வைத்துக் கைது செய்துள்ளனர். இந்தத் துயரச் சம்பவத்திற்குத் துருக்கிய அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளதோடு, மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தத் தனது அரசாங்கம் முழுமையாக ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். சைப்ரஸ் கடல் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள இந்த விபத்தின் பின்னணி மற்றும் தொழில்நுட்பக் கோளாறுகள் குறித்துத் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
