LATEST NEWS
உங்களுக்கு ஒரு வாரம் தா டைம்…..! வெளியான அதிரடி உத்தரவு….. புதிய சிக்கலில் நயன்தாரா-விக்னேஷ் சிவன்….!!!!

நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும் குழந்தை விவகாரம் தொடர்பாக ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த ஜூன் ஒன்பதாம் தேதி, சென்னையில் மகாபலிபுரத்தில் திருமணம் செய்து கொண்டனர். நான்கு மாதங்கள் ஆன நிலையில் இவர்களுக்கு இரட்டை ஆண்குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்திருந்தனர். இவர்களின் அறிவிப்பு பலரிடையில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. திருமணமான நான்கு மாதங்களில் எப்படி இரட்டை குழந்தை பிறந்துள்ளது, என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.அதன் பின்னர் வாடகை தாய் மூலம் இவர்கள் குழந்தை பெற்றது தெரியவந்தது.
இதிலும் ஒரு புதிய சர்ச்சை இருந்தது. அதாவது வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றெடுப்பதற்கு சில விதிமுறைகள் உள்ளது. இந்த விதிமுறைகளை இவர்கள் பின்பற்றவில்லை என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற நயன்தாரா மற்றும் விக்னேஷ்சிவனிடம் விளக்கம் கேட்கப்படும் என்றும், திருமணம் ஆகி ஐந்து ஆண்டுகள் ஆன பின்னரே வாடகை தாய் மூலம் குழந்தை பெற இயலும், என்றும் அவர் தெரிவித்தார். மேலும் நயன்தாரா விக்னேஷ் சிவன் சிகிச்சை பெற்ற மருத்துவமனை குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது.
சுகாதாரத்துறை சார்பில் அமைக்கப்பட்ட மூன்று பேர் கொண்ட குழுவினர் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த விசாரணைக் குழுவினர் ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.