LATEST NEWS
அட இவங்களுமா?…. பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இருந்து விலகும் முக்கிய பிரபலம்?…. ரசிகர்கள் ஷாக்….!!!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல்களில் ஒன்றான பாண்டியன் ஸ்டோர் நிகழ்ச்சியில் மிக விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. ஒரு கூட்டு குடும்பத்தின் கதையை அற்புதமாக வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்து உள்ள இந்த சீரியலுக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தினம்தோறும் புதுவிதமான ட்விஸ்ட் உடன் சீரியல் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது.
இதனிடையே இந்த சீரியல் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த சமயத்தில் முதலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்த வந்த சித்ரா திடீரென உயிரிழந்ததால் அவருக்கு பதிலாக காவியா முல்லையாக நடித்தார். அதன் பிறகு அவரும் தனது சொந்த காரணங்களால் சீரியலை விட்டு வெளியேறிய நிலையில் தற்போது சிப்பிக்குள் முத்து சீரியலில் கதாநாயகியாக நடித்த நடிகை முள்ளையாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் மற்றொரு நாயகியின் கதாபாத்திரம் மாற்றம் குறித்த ஒரு தகவல் இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கிறது. அதாவது சீரியலில் ஐஸ்வர்யா ராய் நடித்தவரும் காயத்ரி படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளதால் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடிக்க நேரமில்லை என்பதால் அவர் விலக இருப்பதாக கூறப்படுகிறது. இருந்தாலும் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.