CINEMA
70th National Film Awards: 1 இல்ல 2 இல்ல 4 தேசிய விருதுகளை அள்ளிய பொன்னியின் செல்வன்….!!!

2022 ஆம் வருடத்திற்கான 70 வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டது இதில் வென்றவர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. அந்தவகையில் இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான “பொன்னியின் செல்வன் -1” படத்துக்கு சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருது பொன்னியின் செல்வன் படத்தில் பணியாற்றிய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும், சிறந்த ஒலி வடிவமைப்புக்கான விருது ஆனந்த் கிருஷ்ணமூர்த்திக்கும், சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருது ரவி வர்மனுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.