CINEMA
ரெட் கார்டு போட்ட தயாரிப்பாளர் சங்கம்…. தனுஷிற்கு ஆதரவு தெரிவித்த ராதாரவி…. என்ன சொன்னார் தெரியுமா..??

நடிகர் தனுஷ் துள்ளுவதோ இளமை என்ற படத்தில் மூலமாக ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தற்போது கோலிவுட்டின் முன்னணி நடிகராக உருவெடுத்துள்ளார் . தெலுங்கு, ஹிந்தி என ஹாலிவுட் படங்களையும் விட்டு வைக்கவில்லை. நடிப்பு, இயக்கம் என்று தனுஷ் பிசியாக இருந்து வரும் நிலையில் அவருடைய திரைப்படங்களுக்கு இனி ஒத்துழைப்பு வழங்கப் போவதில்லை என்று தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்துள்ளது. அதாவது தனுஷை வைத்து படம் இயக்கவோ அவருடைய படங்களை திரையரங்கில் வெளியிடவும் ,படங்களை விநியோகம் செய்யவும் கூடாது என்று முடிவெடுத்துள்ளது.
இந்நிலையில் நடிகர் தனுஷ் அனைவருக்கும் உதவ வேண்டும் என்ற எண்ணம் உடையவர் என நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார். தயாரிப்பாளர்கள் தனுஷ் மீது விதித்துள்ள நிபந்தனைகள் தேவையில்லாதது. தனுஷ் இயக்கிய படம் நன்றாக ஓடிய காரணத்தால் அவருக்கு அழுத்தம் தரப்படுவதை ஏற்க முடியாது என்று பேசியுள்ளார்.