LATEST NEWS
தூங்கும் புலியின் வாலை பிடித்த சந்தானம்…. நொடிப்பொழுதில் நடந்த சம்பவம்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ +உள்ளே)….!!!!

தமிழ் சினிமாவில் முன்னாடி காமெடி நடிகராக மட்டுமல்லாமல் ஹீரோவாக திகழ்பவர் நடிகர் சந்தானம். எப்பொழுதும் திரைப்படங்களில் கவுண்டர் டயலாக்குகளுடன் அனைவரையும் சிரிக்க வைக்கும் சந்தானம் சில வருடங்களாக ஹீரோவாக களமிறங்கியுள்ளார். அவர் நடிப்பில் வெளியான தில்லுக்கு துட்டு, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.
இவர் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் குலு குலு. இந்தத் திரைப்படத்தில் ஆக்சன் கிங் போல சந்தானம் களமிறங்கியுள்ளார். ஒரு பக்கம் ஹீரோவாகவும் மறுபக்கம் காமெடி நடிகராகவும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார். இந்தத் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.
இந்நிலையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் மற்றும் டிராவல் டைரி சென்ற பெயர்களில் வெளிநாட்டில் இருந்து எடுக்கப்பட்ட தனது வீடியோ ஒன்றை சந்தானம் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் ஒரு நிஜப் புலியின் வாலை அவர் பிடித்துள்ளார். அது தூங்குகிறதா என்று காப்பாளரிடம் கேட்கும்போது காப்பாளர் புலியின் தலையில் தட்ட அது அசைந்தது. அதைப் பார்த்ததும் சந்தானம் ஒரு நொடி ஜெர்க் ஆகிவிட்டார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
https://twitter.com/iamsanthanam/status/1606963593765081089