LATEST NEWS
புகழ்பெற்ற நடிகர் கேட்டும் கேளாமல்…. அனைத்தையும் துறந்த ஜி.பி. முத்து….! இயக்குனர் துரைசாமி புகழாரம்….!!!

பிக் பாஸ் தமிழ் ஆறாவது சீசன் தற்போது அக்டோபர் ஒன்பதாம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் எபிசோடில் முதல் நபராக சாந்தி எலிமினேஷன் செய்யப்பட்டார். ஜி.பி. முத்து தாமாகவே முன் வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். இது அவர்களின் ரசிகர்களை பெறும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
பிக் பாஸ் ஆறாவது சீசனின் வெற்றியாளர் ஜி.பி. முத்து என்று ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருக்கும் நிலையில் அவர் வீட்டை விட்டு வெளியேறியது ரசிகர்களுக்கு ஏமாற்றம் இருந்தும் ஜி .பி .முத்து வைல்ட் கார்டு மூலம் மீண்டும் பிக் பாஸுக்குள் வருவார்கள் என்று கூறி வருகின்றனர். இந்நிலையில் ஜி.பி. முத்து வெளியேறியது குறித்து இயக்குனர் சீனுச்சாமி சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் வெற்றி பெற தகுதியான ஒரு போட்டியாளன் அதன் வருமானம் வெகுமானம் யாவற்றையும் பணிவோடு வேண்டாம் என்று துறந்து தன் மகனுக்காக புகழ்வாய்ந்த சபையின் உலக அறிந்த நடிகர் கேட்டும் கேளாமல் பிக் பாஸ் சீசனில் இருந்து விடைபெற்ற தமிழ் மகன் ஜி. பி. முத்து தான் தீபாவளியின் வெற்றி நாயகன் என்று கூறினார். தற்போது பிக் பாஸ் வீட்டினுள் 19 பேர் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
https://twitter.com/seenuramasamy/status/1584506034651267072