CINEMA
விஜய் தன்னை கிறிஸ்தவர் என்று அடையாளப்படுத்தியது கிடையாது…. உரக்க சொன்ன பிரபலம்…!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய். தற்போது தளபதி 69 படத்தில் ஹெச். வினோத் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் பூஜை ஆனது இன்று தொடங்கியுள்ளது. இவர் சமீபத்தில் வெங்கட்ரபி இயக்கத்தில் கோட் படத்தில் நடித்தார். இந்த படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. படம் உலகம் முழுவதும் 450 கோடி வசூல் செய்துள்ளது.
இதற்கிடையில் விஜய் அரசியலில் இறங்கியுள்ளார். முதல் மாநாடு நடக்கவுள்ளது. இந்நிலையில் தளபதி 69 படத்திற்கான பாடல் காட்சிகளுக்கான ஷூட்டிங் தொடங்கிவிட்டது. விஜயின் கடைசி படம் இது என்பதால் விஜய் குறித்த பல தகவல்கள் அவ்வப்போது வெளியாகிக்கொண்டே இருக்கிறது. அந்தவகையில், விஜய் தன்னை எப்போதும் கிறிஸ்தவர் என்று அடையாளப்படுத்திக் கொண்டதே கிடையாது. இந்து மதம் என்றும் சொல்லிக்கொண்டதே கிடையாது. அவர் எம்மதமும் சம்மதம் கொண்டவர் என்று செய்யாறு பாலு பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.