LATEST NEWS
சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கில் திடீர் திருப்பம்… நீதிமன்ற உத்தரவால் கதிகலங்கிய ஹேம்நாத்..!!

சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி தனியார் விடுதி ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரின் இறப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் அவரது கணவர் ஹேம்நாத் மற்றும் பெற்றோர் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தினர். அதன் பிறகு சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக புகார் எழுந்த நிலையில் அவரது கணவர் ஹேம்நாத் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
அதன் பிறகு 60 நாட்கள் சிறையில் இருந்த ஹேம்நாத் ஜாமீனில் வெளியானார். அவரது ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணத்தில் அரசியல் புள்ளிகள் மற்றும் பணம் படைத்தவர்கள் என பலருக்கும் தொடர்பு இருப்பதாக பரபரப்பு புகார்கள் எழுந்தன. இந்நிலையில் சித்ரா வழக்கின் விசாரணையை விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும் எனவும் வழக்கு விசாரணையை சென்னை அமர்வுக்கு மாற்ற வேண்டும் என ஹேம்நாத் மனு தாக்கல் செய்துள்ள நிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, வழக்கில் இருந்து தம்மை விடுவிக்க கோரி ஹேம்நாத் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கில் 67 சாட்சிகளிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி இந்த வழக்கின் விசாரணையை சென்னை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க மறுத்து உத்தரவிட்டது மட்டுமல்லாமல் இந்த வழக்கின் விசாரணையை ஆறு மாதங்களில் முடிக்க திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.