LATEST NEWS
வயிற்றில் குழந்தையுடன் இருக்கும் போது அதை வாங்கிய சீரியல் நடிகை திவ்யா…. வீடியோவை பார்த்து வாழ்த்தும் ரசிகர்கள்….!!!!

சின்னத்திரை சீரியல் நடிகைகளில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை திவ்யா ஸ்ரீதர். இவர் கேளடி கண்மணி என்ற சீரியல் மூலம் நாயகியாக அறிமுகமானார். அதன் பிறகு சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மகராசி தொடரின் நடித்த பிரபலமானார்.
திடீரென அந்த சீரியலில் இருந்து விலகிய திவ்யா செவ்வந்தி சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் தற்போது நடித்து வருகின்றார். இதனிடையே திவ்யாவின் திருமணம் மற்றும் குழந்தை போன்ற பல பிரச்சனைகள் எழுந்தது. திருமணம் முடித்த கையோடு இவரை ஏமாற்றி விட்டு அர்ணவ் சென்றுவிட்டார்.
இதனைத் தொடர்ந்து செவ்வந்தி சீரியல் குழுவினர் அண்மையில் திவ்யாவுக்கு சீமந்தம் நடத்தினர். அந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து தற்போது திவ்யா புதிதாக கார் ஒன்றை வாங்கி உள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க