LATEST NEWS
தல பொங்கலை மூவராக கொண்டாடிய ஷபானா – ஆர்யன் தம்பதி…. வெளிவந்த புகைப்படத்தை பார்த்து வாழ்த்தும் ரசிகர்கள்….!!!!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் நடிகை ஷபானா.இவர் விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வந்த நடிகர் ஆரியனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இருவரும் வெவ்வேறு மதம் என்பதால் இவரின் காதலுக்கு இருவர் வீட்டிலும் சம்மதம் கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இவர்களுக்கு மிக எளிமையாக திருமணம் நடைபெற்றது.
கடந்த தீபாவளியை நடிகர் எம் எஸ் பாஸ்கர் உடன் இருவரும் கொண்டாடினர். அவர் இவர்களுக்கு ஒரு தந்தை போல் என்று குறிப்பிட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து எம் எஸ் பாஸ்கர் உடன் இணைந்து பொங்கல் பண்டிகையை ஷபானா மற்றும் ஆர்யன் தம்பதியினர் கொண்டாடியுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட அழகிய புகைப்படத்தை ஷபானா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
