LATEST NEWS
முன்னணி நடிகர்களுடன் கைகோர்க்கும் சன் பிக்சர்ஸ் யார் அந்த நடிகர்கள் விவரம் உள்ளே…

சன் பிக்சர்ஸ் நம் அனைவரும் அறிந்த ஒரு தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனம். இந்த நிறுவனத்திலிருந்து ஒரு படம் வருகின்றது என்றால் கண்டிப்பாக அந்த அதிக அளவில் வசூல் வேட்டை செய்து அந்த படம் ஹிட் தான் என்று கூறிவிடலாம்.
ஏனெனில் அந்த அளவிற்கு அவர்களின் ப்ரோமோஷன் இருக்கும், சன் பிக்சர்ஸ் ஒரு படத்தை ப்ரோமோஷன் செய்யும் அளவிற்கு வேறு எந்த நிறுவனமும் செய்யாது.என்றும் கூறலாம். சீரியல்களின் நடுவே விளம்பரங்களிலேயே பல ப்ரோமோஷன் வந்து பார்க்க நினைக்காதவர்களை கூட பார்க்க வைத்து விடும்.அந்த அளவிற்கு மிகச் சிறப்பாகவே இருக்கும்.இந்நிலையில் சன் பிக்சர்ஸ் அடுத்தடுத்து பல ஹீரோக்களுடன், ஹீரோயின்கள் மையப்படுத்திய படம் செய்வதற்கு முயற்சித்தும், அதை செய்தும் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் ரஜினியுடன் அண்ணாத்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது தயாரித்து வருகின்றது.இது மட்டுமின்றி ராகவா லாரன்ஸுடன் ஒரு படத்தில் பணியாற்றவுள்ளதாக கூறப்படுகின்றது.
இதோடு தனுஷுடன் படம் செய்ய விருப்பபடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டனர், மேலும், விஜய், சூர்யா, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் ஆகியோருடன் படம் செய்ய முயற்சித்து வருகின்றார்களாம்.
இவை மட்டும் நடந்தால் கண்டிப்பாக சன் பிக்சர்ஸின் அசுர வளர்ச்சியாக இந்த வருடம் இருக்கும்.