LATEST NEWS
டாலடிக்கும் ரத்தினமே….. மினுமினுக்கு முத்தாரமே….. இணையத்தில் ட்ரெண்ட்டாகும் தமன்னாவின் தீபாவளி புடவை….!!!!

தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பழமொழிகளில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை தமன்னா. 2005 ஆம் ஆண்டு ஹிந்தி திரைப்படத்தில் அறிமுகமான இவர் தமிழில் கேடி என்ற திரைப்படம் மூலமாக அறிமுகமானார். இவர் நடித்த கல்லூரி திரைப்படம் இவருக்கு நல்ல அங்கீகாரத்தை கொடுத்தது.
அதன் பிறகு படிக்காதவன், அயன், கண்டேன் காதலை, ஆனந்த தாண்டவம் ,பையா உள்ளிட்ட பல படங்களில் இவர் நடித்துள்ளார். கடந்து சில வருடங்களாக தமிழ் சினிமா பக்கம் தலை காட்டாமல் இருந்து வந்ததார். இதைத்தொடர்ந்து தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக தமன்னா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் தமன்னா அவ்வபோது போட்டோ சூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதை பார்த்து ரசிகர்கள் டாலடிக்கும் ரத்தினமே…. மினுமினுக்கு முத்தாரமே… என்று வர்ணித்து வருகின்றனர்…