நயன்தாரா-விக்னேஷ் சிவன் குழந்தை பெற்ற விவகாரம்…. விதிமீறல் இல்லை….. வெளியான தகவல்….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நயன்தாரா-விக்னேஷ் சிவன் குழந்தை பெற்ற விவகாரம்…. விதிமீறல் இல்லை….. வெளியான தகவல்….!!!

Published

on

நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதியினர் இரட்டை குழந்தை தொடர்பான விவகாரத்தில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. விக்னேஷ் சிவன் கடந்த ஜூன் ஒன்பதாம் தேதி சென்னையில் திருமணம் செய்து கொண்டனர் திருமணமான நான்கு மாதங்களில் இவர்களுக்கு எப்படி இரட்டை ஆண் குழந்தை பிறந்தது என்பது தொடர்பாக பல கேள்விகள் எழுப்பப்பட்டது. அதன் பின்னர் வாடகை தாய் மூலம் அவர்கள் குழந்தை பெற்றுக் கொண்டது தெரிய வந்தது.

இவர்கள் பல்வேறு விதிகளை மீறி இதை செய்துள்ளார்கள் என்று கூறிவந்த நிலையில் இது குறித்து நயன்தாரா விக்னேஷ்சிவனிடம் விளக்கம் கேட்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்திருந்தார் . பின்னர் நான்கு பேர் கொண்ட சுகாதாரக் குழுவினர் விசாரணை செய்தனர் இதை எடுத்து விசாரணை குழுவிடம் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பெற்றுள்ளதற்கான ஆதாரங்களை நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதி சமர்ப்பித்துள்ளனர்.

Advertisement

அதில் இவர்கள் இருவரும் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும் கடந்த டிசம்பர் மாதமே வாடகை தாய்முறையில் குழந்தை பெற பதிவு செய்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. கடந்த ஜூன் மாதம் தான் வாடகை தாய் நெறிமுறை சட்டம் அமலுக்கு வந்தது என்றும் அது தங்களை கட்டுப்படுத்தாது என்றும் குறிப்பிட்டதாக தெரிவித்தார். இது தொடர்பாக மா. சுப்பிரமணியன் தெரிவித்ததாவது நயன்தாரா விவாதத்தில் நான்கு பேர் கொண்ட குழுவை நியமித்திருக்கிறோம்.

அந்த குழு விசாரித்து கொண்டிருக்கிறார்கள் முழு அறிக்கை கிடைக்கப்பெற்ற பின்னர் எந்த மாதிரியான விதிமிரல் நடைபெற்று இருக்கின்றது என்பது குறித்து அறிவிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். இந்நிலமையில் இன்று விசாரணை குழு அறிக்கை தாக்கல் செய்தது அதில் நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதி முறையாக குழந்தை பெற்றுக் கொண்டுள்ளதாகவும் எந்த ஒரு விதிமீறலும் ஈடுபடவில்லை என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in