LATEST NEWS
என்னது ஜெய் பீம் படத்திற்கு விருது இல்லையா?… என் இதயமே நொறுங்கி விட்டது.. பிரபல தெலுங்கு நடிகர் போட்ட பதிவு..!!
இந்திய திரையுலகினரை பெருமைப்படுத்தும் வகையில் ஒவ்வொரு வருடமும் தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் மாலை 69ஆவது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டது. 2021 ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழ் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் மிகவும் எதிர்பார்த்த படங்களுக்கு தேசிய விருது கிடைக்காதது மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது. இருந்தாலும் தெலுங்கு மற்றும் ஹிந்தி திரை உலகை சேர்ந்தவர்கள் அதிக அளவில் விருதுகளை பெற்றுள்ளனர்.
அதன்படி RRR, புஷ்பா ஆகிய திரைப்படங்களுக்கு அதிக அளவு விருதுகள் கிடைத்ததால் தெலுங்கு சினிமா ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். புஷ்பா திரைப்பட நடிகர் அல்லு அர்ஜுனனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு சினிமாவில் சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெரும் முதல் நடிகர் என்ற பெருமையை அல்லு அர்ஜுன் பெற்றுள்ளார். இதனால் தெலுங்கு சினிமா துறையினர் அனைவரும் கொண்டாட்டத்தில் உள்ளனர்.
தமிழ் சினிமாவில் விருது பெரும் என எதிர்பார்க்கப்பட்ட பல திரைப்படங்களுக்கு ஒரு விருது கூட அறிவிக்கப்படாதது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மத்தியில் கடும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. இந்நிலையில் தெலுங்கு நடிகர் நானி இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் ஜெய் பீம் திரைப்படத்திற்கு விருது கிடைக்காதது பற்றி பதிவிட்டுள்ளார். அவர் இதயம் முடிந்து விட்டது போன்ற எமோஜி ஒன்றையும் பதிவிட்டுள்ள நிலையில் தற்போது அந்த பதிவு வைரலாகி வருகிறது.
