LATEST NEWS
ஜோதிகா, சினேகா எல்லாம் இல்ல… இந்த தெலுங்கு நடிகை தான்… ‘தளபதி 68’ பட ஹீரோயின்…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் உருவாகியுள்ள நிலையில் இந்த திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கும் தளபதி 68 திரைப்படத்தின் விஜய் நடிக்க உள்ளார்.
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படதில் விஜய் – வெங்கட் பிரபு – யுவன் சங்கர் ராஜா கூட்டணி இணைகின்றனர். இந்த திரைப்படத்தின் பூஜை செப்டம்பர் மாதம் நடைபெறும் எனவும் அக்டோபர் முதல் வாரத்தில் விஜய் படப்பிடிப்பின் கலந்து கொள்வார் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுவரை டபுள் ஆக்ஷனில் யாரும் செய்திடாத பல புதிய முயற்சிகளை எடுப்பதற்கு வெங்கட் பிரபு திட்டமிட்டுள்ளார்.
[irp]
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் தளபதி 68 வேலைகள் தொடங்கபட்டது. அதன்படி விஜய், வெங்கட் பிரபு மற்றும் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் உள்ள யுனிவர்சிட்டி ஆப் சவுதர் கலிபோர்னியா இன்ஸ்டியூட்டா ஃபார் க்ரியேட்டிவ் டெக்னாலஜி சென்டருக்கு சென்று சென்னைக்கு திரும்பினர். இந்த படத்தின் ஷூட்டிங் நாளை பூஜை உடன் தொடங்குகிறது. சென்னையை தொடர்ந்து வெளிநாட்டில் ஷூட்டிங் நடைபெற இருக்கிறது.
Another Bloody Sweet News for @Actorvijay Fans !!!
Telugu Actress Meenakshi Chowdary roped in as female lead in #Thalapathy68 pic.twitter.com/oXb0pR8KEM
— Roвιɴ Roвerт (@PeaceBrwVJ) October 1, 2023
[irp]
இந்நிலையில், தளபதி 68ல் சினேகா அல்லது ஜோதிகா கதாநாயகிகளாக நடிப்பார்கள் என இணையத்தில் பரவலாக கூறப்பட்டு வந்தது. ஆனால் தற்போது இளம் தெலுங்கு நடிகையான மீனாட்சி சவுத்ரிக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. இவர் விஜய் ஆண்டனியின் கொலை படத்தில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
#Thalapathy68 Begins with Pooja Tomorrow & Shooting Starts From Oct 3rd – Summer ⛱️ 2024 Release !!@Actorvijay #Thalapathy68 @vp_offl pic.twitter.com/y0HcXBZ4qa
— Roвιɴ Roвerт (@PeaceBrwVJ) October 1, 2023
[irp]