VIDEOS
அனுஷ்காவின் அழகை வர்ணித்து பாட்டு பாடிய தளபதி விஜய்… இதுவரை பலரும் பார்க்காத வீடியோ..!!

கோலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடி கட்டி பறந்தவர் தான் நடிகை அனுஷ்கா. இவர் தெலுங்கில் முதலில் அறிமுகமாகி அதன் பிறகு தன்னுடைய அழகாகும் திறமையாலும் ரசிகர்களை கவர்ந்தார். தமிழில் விஜய் உடன் வேட்டைக்காரன், சூர்யாவுடன் சிங்கம் மற்றும் அஜித்துடன் என்னை அறிந்தால் என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் ஜோடியாக நடித்து டாப் நடிகைகளில் ஒருவராக மாறினார்.
அதன் பிறகு அனுஷ்கா பாகுபலி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் நல்ல வரவேற்பை பெற்றார். தொடர்ந்து ஆர்யாவுடன் இஞ்சி இடுப்பழகி படத்தில் நடித்த நிலையில் அந்த படத்திற்காக உடல் எடையை ஏற்றிய அனுஷ்காவுக்கு அதன் பிறகு உடல் எடையை குறைக்க முடியாமல் போனதால் பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் வேட்டைக்காரன் திரைப்படத்தில் அனுஷ்கா ஒன்றாக நடித்த போது இருந்த அனுபவம் பற்றி தளபதி விஜய் பேசிய ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதாவது வேட்டைக்காரன் திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய விஜய், அனுஷ்கா படப்பிடிப்பு செட்டில் வரும்போது அழகு என்ற சொல்லுக்கு அனுஷ்கா என்று பாடி தான் அனைவரும் அவரை அழைப்பார்கள். அவரின் பெயர் அனுஷ்கா கிடையாது ஸ்வீட்டி என்ற விஜய் கலகலப்பாக பேசினார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க