CINEMA
அடுத்தடுத்து டாப் ஹீரோக்களை களத்தில் இறக்கும் மாரி செல்வராஜ்…. புது அப்டேட் இதோ…!!

“பரியேறும் பெருமாள்” படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான மாரி செல்வராஜ் தனுஷை வைத்து கர்ணன் மற்றும் உதயநிதியை வைத்து மாமன்னன் படங்களை இயக்கினார். தற்போது வாழை படத்தை இயக்கியுள்ளார். இந்நினையில் சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் பேசிய மாரி செல்வராஜ், அடுத்து இயக்கப் போகும் படங்களை குறித்து பகிர்ந்துள்ளார். பைசன் திரைப்படத்திற்கு அடுத்து தனுஷ் நடிப்பில் படத்தை இயக்கப் போகிறாராம்.
அதனை தொடர்ந்து கார்த்தி வைத்து படம் ஒன்றை இயக்கு உள்ளதாக தெரிவித்துள்ளார். மாமன்னன் திரைப்படம் எடுக்கும் சமயத்தில் கார்த்தியை நேரில் அழைத்து கதை கேட்டதாகவும் ஒரு ஐந்து நிமிட கதையை சொன்னதாகவும் கூறியுள்ளார் . என்னுடைய கதைக்களமும், கதையின் வீரியமும் அவருக்கு நன்றாக புரிந்தது. அதனால் நானும் அவரும் ஒன்றாக பணியாற்ற உள்ளோம் என்று கூறியுள்ளார்.