“அய்யயோ.. கொம்புகளால் முட்டித் தூக்கி வீசிய வெறி மாடு..” ரத்த வெள்ளத்தில் சரிந்து முதியவருக்கு நேர்ந்த கொடூரம்.. நெஞ்சை உறைய வைக்கும் சிசிடிவி காட்சி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அய்யயோ.. கொம்புகளால் முட்டித் தூக்கி வீசிய வெறி மாடு..” ரத்த வெள்ளத்தில் சரிந்து முதியவருக்கு நேர்ந்த கொடூரம்.. நெஞ்சை உறைய வைக்கும் சிசிடிவி காட்சி..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் தேஹாத் மாவட்டத்தில், சாலை மாடு தாக்கியதில் 80 வயது முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சோகச் சம்பவம் அரங்கேறியுள்ளது. அக்பர்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நகரப் பகுதியில், பொதுமக்களுக்கு இடையூறாக நின்றிருந்த மாடு ஒன்றை அந்த முதியவர் அப்புறப்படுத்த முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ஆத்திரமடைந்த அந்த மாடு, முதியவரைத் தனது கொம்புகளால் முட்டித் தரையில் தூக்கி வீசி கொடூரமாகத் தாக்கியுள்ளது.

மாட்டின் இந்த வெறித்தனமான தாக்குதலில் முதியவர் கடுமையான காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்துள்ளார். அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோதிலும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து அக்பர்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வரும் நிலையில், குடியிருப்பு மற்றும் நகர்ப்புறப் பகுதிகளில் சுற்றித் திரியும் சாலை மாடுகளின் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in