LATEST NEWS
மன்சூர் அலிகான் விவகாரம்.. நடிகை த்ரிஷாவுக்கு அனுப்பப்பட்ட கடிதம்.. பின்னணி என்ன..?

நடிகர் மன்சூர் அலிகான் த்ரிஷா பற்றி கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான படம் லியோ. இந்த படத்தில் த்ரிஷா, மன்சூர் அலிகான் உள்பட பல நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர். திரைப்படத்தில் வாய்ப்பு இல்லாமல் இருந்த மன்சூர் அலிகானுக்கு லோகேஷ் கனகராஜ் வாய்ப்பு கொடுத்தார்.

#image_title
சமீபத்தில் மன்சூர் அலிகான் அளித்த பேட்டியில் நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குள்ளான வகையில் பேசி இருந்தார். அதாவது லியோ படத்தில் பெட்ரூம் காட்சி மிஸ் ஆகி விட்டது. குஷ்பு, ரோஜாவை மெத்தையில் போட்டது போல த்ரிஷாவை போட முடியவில்லை என பொருள்படும்படி அவர் பேசியது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு த்ரிஷா கண்டனத்தை பதிவு செய்தார்.

#image_title
மேலும் மன்சூர் அலிகான் உடன் இனி நடிக்கப் போவதில்லை என அறிவித்தார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உள்பட பல திரைப்பட நடிகர், நடிகைகள் மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவித்தனர். இது விவகாரம் தேசிய மகளிர் ஆணையம் வரை சென்றது. இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் சென்னை போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் சென்னை ஆயிரம் விளக்கு போலீசார் நடிகர் மன்சூர் அலிகான் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவு 354a, 509 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். மேலும் மன்சூர் அலிகானை நேரில் வரவழைத்து விசாரணை நடத்தியுள்ளனர். இந்நிலையில் சென்னை ஆயிரம் விளக்கு மகளிர் காவல் துறை சார்பில் நடிகை த்ரிஷாவுக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில் மன்சூர் அலிகான் விவகாரத்தில் எழுத்துப்பூர்வமான விளக்கம் அளிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

#image_title
அதற்கு த்ரிஷா அளிக்கும் விளக்கத்தை தொடர்ந்து மன்சூர் அலிகான் மீது அடுத்த கட்ட நடவடிக்கை பாயும் என கூறப்படுகிறது. முன்னதாக நடிகர் மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்டதாக செய்திகள் வெளியானது. ஆனால் மன்சூர் அலிகான் அதனை மறுத்துவிட்டார் மரணித்து விடு என தான் கூறியது மன்னித்துவிடு என தவறாக பொருள் கொள்ளப்பட்டுள்ளதாக கூறி விவாதத்தை கிளப்பினார். தற்போது போலீசார் இந்த விவகாரத்தில் த்ரிஷாவிடம் விளக்கம் கேட்டுள்ளனர்.

#image_title