CINEMA
இன்று மாலை 5 மணிக்கு…. “மினிக்கி.. மினிக்கி” பாடலின் வீடியோ வெளியீடு… படக்குழு அறிவிப்பு…!!

நடிகர் சியான் விக்ரம் ஒவ்வொரு படத்திற்கும் தன்னுடைய வித்தியாசமான நடிப்பை வெளிக்காட்டுவார். மேலும் அதற்கான கடுமையான முயற்சிகளும் மேற்கொள்வார். அந்தவகையில் அவரின் கடின முயற்சியால் தற்போது வெளியாகியுள்ள திரைப்படம்தான் தங்கலான். பா. ரஞ்சித் இயக்கத்தில் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது.
இந்த படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்க, ஜிவி பிரகாஷ் இசை அமைத்திருந்தார் . கலவையான விமர்சனங்கள் படத்தின் மீது இருந்தாலும் விக்ரம், மாளவிகா மோகனன் ,பசுபதி அனைவருடைய நடிப்பும் மிரட்டல் ஆகவே இருந்தது .அதேபோல ஜிவி பிரகாஷ் இசை அருமையாக இருந்தது. இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ‘மினிக்கி.. மினிக்கி..’ பாடலின் வீடியோ, இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.