LATEST NEWS
“தாய் கிழவி”.. ஓராண்டு நிறைவு செய்த திருச்சிற்றம்பலம்.. வெற்றியை கொண்டாடிய படக்குழு.. வைரலாகும் புகைப்படங்கள்..!!

தென்னிந்திய சினிமா அளவில் முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருப்பவர் தான் நடிகர் தனுஷ்.
இவர் நடிப்பில் இறுதியாக வெளியான வாத்தி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்ததாக கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் கலக்கி வந்த தனுஷ் தற்போது ஹாலிவுட் வரை சென்று அழுத்தமான கால் தடத்தை பதித்து விட்டார்.
தற்போது கேப்டன் மில்லர் திரைப்படம் டிசம்பர் 15ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் கடந்த வருடம் ஆகஸ்ட் 18ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் திருச்சிற்றம்பலம்.
இந்தத் திரைப்படத்தில் தனுஷ் டெலிவரி பாய் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இயக்குனர் இமயம் பாரதிராஜாவும் நடிகர் பிரகாஷ் ராஜூ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
மேலும் நித்யா மேனன், ப்ரியா பவானி சங்கர் மற்றும் ராக்ஷிக் அண்ணா ஆகியோரும் இந்த திரைப்படத்தில் நடித்த நிலையில் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
இந்த திரைப்படம் சுமார் 100 கோடி வரை வசூல் செய்ததாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இந்நிலையில் திருச்சிற்றம்பலம் திரைப்படம் வெளியாகி ஒரு வருடம் ஆகியுள்ள நிலையில் ரசிகர்கள் இந்த படத்தில் முக்கிய காட்சிகள் மற்றும் முக்கிய டயலாக் போன்றவற்றை போட்டு அதனை சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் செய்து வந்தனர்.
அதேசமயம் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் ஒரு வருடத்தை கொண்டாடும் விதமாக அந்த திரைப்படத்தில் நடித்த நடிகர்கள் தனுஷ், பிரகாஷ்ராஜ் மற்றும் நித்யா மேனன், இயக்குனர் மித்ரன் ஆர் ஜவகர் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் சந்தித்தனர்.
அது தொடர்பான புகைப்படங்களை தனுஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.