CINEMA
“விடாமுயற்சி” குழுவின் லேட்டஸ்ட் புகைப்படம்…. எக்ஸ் தளத்தில் பதிவிட்ட நடிகை திரிஷா…!!

நடிகர் அஜித் நடிப்பில் தற்போது விடா முயற்சி மற்றும் குட் பேட் அக்லி திரைப்படங்கள் உருவாகி வருகிறது. விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது.இதனை முடித்த கையோடு குட் பேட் க்லி படத்தில் நடிக்க தொடங்கி விடுவார். இதற்கான முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த ஆண்டு பொங்கலுக்கு இந்த படம் வெளியாகும். படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் முடிவடையவுள்ளது.
படத்தின் அப்டேட் இன்று மாலை 4.33 மணிக்கு வெளியாகிறது என்று அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், ‘விடாமுயற்சி’ படத்தின்லேட்டஸ்ட் கிளிக்ஸ்-ஐ நடிகை த்ரிஷா பகிர்ந்துள்ளார்.
#Vidaamuyarchi pic.twitter.com/mKqcSrj86V
— Trish (@trishtrashers) August 20, 2024