CINEMA
“குட் பேட் அக்லி” படத்தில் அந்த நடிகையோடு மீண்டும் அஜித்…? குழப்பத்தில் ரசிகர்கள்…!!

த்ரிஷா இல்லனா நயன்தாரா என்ற படத்தை இயக்கிய ஆதித் ரவிச்சந்திரன் அந்த படத்திற்கு பிறகு அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்தது. சிம்பு, பிரபு தேவா, விஷால் போன்ற முன்னணி நடிகர்களை வைத்து இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து நடிகர் விஷால் மற்றும் எஸ்ஜே சூர்யா வைத்து மார்க் ஆண்டனி படத்தை இயக்கினார் .இந்த படம் 100 கோடி வசூல் செய்து மிகப் பெரிய வெற்றி படமாக மாறிய நிலையில் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு நடிகர் அஜித்குமார் வைத்து குட் பேட் அக்லி படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் “திரிஷா இல்லனா நயன்தாரா” படம் எடுத்த ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்திலேயே த்ரிஷா நடிக்க போகிறாரா? என்று சினிமா வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகி கொண்டு வருகிறது.
இந்த படத்தில் முன்னதாக டோலிவுட் நடிகை ஸ்ரீ லீலா தான் நடிக்க போவதாக பேசி வந்த நிலையில் தற்போது திரிஷாவின் பெயர் அடிபட்டு வருகிறது. இதனால் ரசிகர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த படத்தில் யார் நடிப்பார் என்பது குறித்து அப்டேட் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.