LATEST NEWS
13 வருட காதலருடன் டும் டும்…. பட வாய்ப்பு இல்லாமல் விளம்பரமே கதியாக கிடக்கும் கீர்த்தி சுரேஷ்…. கலாய்க்கும் நெட்டிசன்கள்…..!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் இளைஞர்களின் கனவு கன்னியான நடிகை கீர்த்தி சுரேஷ். தற்போது கீர்த்தி சுரேஷ் மாமன்னன் மற்றும் சைரன் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக ஒரு செய்தி பரவி வருகிறது. இதற்கு பத்திரிக்கையாளர் பிஸ்மி ஒரு தகவலை பகிர்ந்து உள்ளார்.
அதாவது கீர்த்தி சுரேஷின் குடும்பத்தின் நெருங்கிய நண்பர் தன்னிடம் கீர்த்தி சுரேஷின் காதல் குறித்து கூறியிருந்ததாகவும் பள்ளி பருவத்திலிருந்து கீர்த்தி சுரேஷ் ஒருவரை 13 வருடமாக காதலித்து வருவதாகவும் அவருடன் திருமணம் செய்ய இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்து விட்டதால் திருமணத்திற்கு தயாராக நான்கு வருடங்கள் டைம் கேட்டிருப்பதால் படங்களில் கமிட்டாகாமல் இருக்கும் படத்தினை கீர்த்தி சுரேஷ் முடிக்க உள்ளதாகவும் கூறியிருந்தார்.
இந்நிலையில் படங்களில் அதிகம் நடிக்காமல் விளம்பர படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வருவதை நெட்டிசன்கள் பலரும் கிண்டல் அடித்து அவரின் ஒரு விளம்பர வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க