LATEST NEWS
வடிவேலு நடிக்காமல் போனதற்கு ஜெயலலிதா காரணம் இல்லை….! உண்மையை கூறிய மூத்த பத்திரிகையாளர்….!!!

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் வைகை புயல் என்று அழைக்கப்படும் நகைச்சுவை நடிகர் வடிவேலு. பல வருடமாக நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் .ஒவ்வொரு படத்திலும் இவரின் நகைச்சுவை மிகப்பெரிய பங்களிப்பை ஆற்றியுள்ளது. ஒரு சில திரைப்படங்கள் இவரின் காமெடிக்காகவே பல நாட்கள் ஓடியுள்ளது. அந்த அளவுக்கு காமெடியின் ராஜாவாக வளர்ந்து வந்தார்.
அதன் பிறகு விஜயகாந்த் உடன் ஏற்பட்ட மோதல் காரணமாக கடந்த 2011 ஆம் ஆண்டு விஜயகாந்த் க்கு எதிராக பிரச்சாரம் செய்ய தொடங்கினார் .தி.மு.க. ஆதரித்து இவர் செய்த பிரச்சாரத்தில் விஜயகாந்தை கண்டபடி பேசியிருந்தார். ஆனால் அந்த தேர்தலில் தி.மு.க. தோல்வியை சந்தித்தது. அதன் பிறகு சில காலங்கள் சினிமாவில் தென்படாமல் இருந்தார் வடிவேலு. இவர் நடிக்காமல் போனதற்கு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தான் காரணம் என்று பலரும் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் இது தொடர்பாக மூத்த பத்திரிக்கையாளர் பிஸ்மி தெரிவித்துள்ளதாவது “பட வாய்ப்பு எதுவும் இல்லாமல் பத்து வருடமாக வடிவேலு வீட்டில் உட்கார்ந்திருந்தார். இவர் தயாரிப்பாளிறடமும், இயக்குனரிடமும் சரியாக நடந்து கொள்ளவில்லை. அப்படி அவர் முறையாக நடந்து கொண்டிருந்தால் இன்னும் 20 வருடங்களுக்கு அவரை யாராலும் அசைத்திருக்க முடியாது. பலரும் ஜெயலலிதா தான் அவர் நடிக்காமல் போனதற்கு காரணம் என்று கூறி வருகின்றனர் .
ஆனால் அது உண்மை கிடையாது. அது தவறான கருத்து ஜெயலலிதா அவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே வடிவேலு பட வாய்ப்புகள் இல்லாமல் தவிர்த்து வந்தார். சக நடிகர்கள், இயக்குனர், தயாரிப்பாளர் என அனைவரிடமும் சண்டை மோதல் இருந்தது. தயாரிப்பாளர்களிடத்திலும் இவர் டார்ச்சர் செய்து வந்துள்ளார். இதனால் தான் இவரின் திரைப்பயணம் முடிவுக்கு வந்தது” என்று தெரிவித்துள்ளார்.