LATEST NEWS
விஜயின் GOAT படம் ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா..? உறுதிப்படுத்திய இயக்குனர் வெங்கட் பிரபு.. என்ன சொன்னாரு தெரியுமா..?

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திற்கு தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கும் கோட் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார்.
மேலும் பிரசாந்த், மைக் மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே கோட் படத்தில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் கோட் படத்தின் ஷூட்டிங்கை ரஷ்யாவில் நடத்த திட்டமிட்டனர். ஆனால் அதில் சில சிக்கல்கள் இருப்பதால் ஹைதராபாத்தில் ஒரு சில காட்சிகளை எடுக்க முடிவு செய்துள்ளனர்.
கோட் படம் விஜய்யை இரண்டு வேடங்களில் நடிக்க வைத்து டைம் ட்ராவலை கதைக்களமாக கொண்டுள்ளது. இந்த நிலையில் படம் பற்றி பேசிய இயக்குனர் வெங்கட் பிரபு, கிட்டத்தட்ட இறுதி கட்ட படப்பிடிப்பை நெருங்கி விட்டோம். இந்த மாத இறுதிக்குள் படப்பிடிப்பு முடிந்து விடும். கோட் படம் ஹாலிவுட் ஜெமினி மேன் படத்தின் ரீமேக் என கூறுகிறார்கள்.
ஆனால் அது அப்படி கிடையாது. கோட் பட போஸ்டரில் விஜய் இரண்டு வேடத்தில் வருவதால் அப்படி கூறுகிறார்கள். படத்தை பார்த்துவிட்டு சொல்லுங்கள். கோட் படம் ரீமேக் கிடையாது என கூறியுள்ளார். கோட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்களை மே மாதம் வெளியிட திட்டமிட்டு இருக்கிறோம். வேலைகள் முடிந்த பிறகு தான் ரிலீஸ் தேதியை முடிவு செய்ய முடியும் என கூறியுள்ளார்.