CINEMA
அந்த பெண்ணை பத்தி தப்பா பேசினா செருப்பால அடிப்பேன்…. பொங்கியெழுந்த வெங்கடேஷ் பட்…!!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் தொகுப்பாளர் மணிமேகலைக்கும், பிரியங்காவிற்கும் வாய் தகராறு ஏற்பட்டதால் தொகுப்பாளர் மணிமேகலை அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகி உள்ளார். இதற்கான காரணத்தை அவருடைய யூடியூப் சேனலில் வெளிப்படையாகவே கூறியிருக்கிறார். இதனைக் கேட்ட மீடியா பிரபலங்கள் பலரும் மணிமேகலைக்கு ஆதரவாக கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
இந்நிலையில் பேசிய குக் வித் கோமாளியின் முன்னாள் நடுவராக பங்கேற்ற வெங்கடேஷ் பட், மணிமேகலைக்கும் பிரியங்காவிற்கும் நடந்தது ஒரு அக்கா, தங்கச்சி சண்டை. இதை பத்தி பேச யாருக்குமே உரிமை இல்லை. இடையில இருக்குறவங்க கிளம்பி தங்களுடைய எண்ணங்களை சொல்றாங்க. முதல்ல ஒரு பெண்ணை பத்தி தப்பா பேச அவர்கள் யார்? அப்படி பேசும் எவனா இருந்தாலும் அவனை செருப்பால அடிக்கணும். அந்த பொண்ணு ஒரு வீடியோ போட்ருக்கு, அந்த வீடியோல என்ன சொல்லிருக்கு அத பத்தி பேசு. அதவிட்டுடு அவங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேச யாருக்கும் உரிமையே கிடையாது என்று காட்டமாக பேசியுள்ளார்.