LATEST NEWS
பொறுமையா விசாரிச்சு….! 10 வருஷத்துக்கு அப்புறம் தண்டனை கொடுக்காதீங்க….! அவனை ரயில்ல தள்ளி விடுங்க….! விஜய் ஆண்டனி அதிரடி….!!!

கல்லூரி மாணவி சத்யா கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு உடனடியாக தண்டனை கொடுக்க வேண்டும் என்று இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி வலியுறுத்தியுள்ளார். சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த கல்லூரி மாணவி சத்யா தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த 23 வயதான சதீஷ் என்பவர் சத்யாவை கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.
அவர்களின் காதல் விவகாரம் சத்யா வீட்டிற்கு தெரிய வர கடந்த சில மாதங்களுக்கு முன்பு சதீஷ் மீது காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இதையடுத்து சத்யா சதீஷை விட்டு விலகினார். மேலும் சதீஷ்ஷுடன் காதலை தொடரவும் மறுத்திருந்தார் .நேற்று வழக்கம்போல் சத்யா கல்லூரிக்கு செல்வதற்காக பரங்கிமலை ரயில் நிலையத்திற்கு வந்த போது சம்பவ இடத்திற்கு வந்த சதீஷ் சத்யாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
தொடர்ந்து சண்டை முற்றிய நிலையில் ரயிலின் முன்பு சத்யாவை தள்ளிவிட்டு கொலை செய்துவிட்டு சதீஷ் அங்கிருந்து தப்பி ஓடினார். ரயிலின் முன்பு தள்ளிவிடப்பட்ட சத்யா நொடிப்பொழுதில் தலை துண்டாகி உயிரிழந்த சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியது.இதைத்தொடர்ந்து தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளியை தேடி வந்த நிலையில் சதீஷ் இன்று காலை கைது செய்யப்பட்டார்.
இந்த கொடூர சம்பவம் குறித்து நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில் பொறுமையாக விசாரித்து பத்து ஆண்டுகளுக்கு பிறகு தண்டனை கொடுக்காமல் ,உடனடியாக விசாரித்து ரயிலில் தள்ளிவிட்டு தண்டனை கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது சத்யாவை கொன்று சத்யாவின் அப்பாவின் தற்கொலைக்கும் காரணமான சதீஷை பொறுமையாக விசாரித்து பத்து வருஷம் அப்புறம் தூக்குல போடாம தயவு செய்து உடனே விசாரித்து ரயில்ல தள்ளிவிட்டு தண்டிக்கும்படி சத்யாவின் சார்பாக பொதுமக்களில் ஒருவனாக கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.