LATEST NEWS
மாஸ்டர் இசை விழாவில்’.. ‘மத்திய, மாநில அரசு’ மற்றும் CAA-வுக்கு’ “எதிராக விளாசி தள்ளிய விஜய்”.. தற்போது’.. வெளியான “பரபரப்பு தகவல்”..?

ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட தளபதி விஜயின் மாஸ்டர் திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று நடைபெற்றது என்பது அனைவரும் தெரிந்ததே. இந்த விழாவில் பட பிடிப்பில் நடந்த ஐ.டி ரைடு மற்றும் அரசியல் அவலங்களை பற்றி என்ன பேசுவார் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்தோம் ஆனால் விஜய் கொஞ்சம் சைலண்டாகவே இருந்தார். மற்றும் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக அவர் எந்தவிதமான கருத்தையும் கூறவில்லை
ஆனால் தற்போது தீ’யாக பரவி வரும் தகவல் என்ன என்றால் சிஏஏ குறித்து அவர் ஒரு கருத்தை கூறியதாகவும் அந்த காட்சியை சன்டிவி கட் செய்து விட்டதாகவும் ஒரு தகவல் மிக வேகமாக பரவி வருகிறது. அதில் விஜய் பேசியாவது என்னவென்றால்
“மக்களுக்கு தேவையான சட்டத்தை உருவாக்க வேண்டுமே தவிர சட்டத்தை உருவாக்கி விட்டு அதனை மக்களிடம் திணிக்கக் கூடாது”
என்று விஜய் பேசியதாக கூறப்படுகிறது
ஒரு சில விஜய் ரசிகர்கள் நேரில் இந்த விழாவில் கலந்து கொண்ட போது விஜய் இவ்வாறு பேசியதாகவும், ஆனால் சன் டிவியில் இது ஒளிபரப்ப விடவில்லை என்று கூறுகின்றனர் ஆனால் இன்னும் சிலரோ விஜய் அவ்வாறு பேசவில்லை என்றும் கூறிவருகின்றனர். உண்மையில் சிஏஏவுக்கு எதிராக விஜய் பேசினாரா இல்லையா என்பதை அவரே விளக்கினால் மட்டுமே இந்த குழப்பத்திற்கு விடை கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது