CINEMA
மனைவி சங்கீதாவோடு பைக்கில் இருக்கும் விஜய்…. வைரலாகும் பழைய புகைப்படம்…!!

நடிகர் விஜய் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த கோட் திரைப்படம் வெளியாகியது. இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து தளபதி 69 அதாவது விஜயின் கடைசி படம் நேற்று மாலை 5 மணிக்கு படத்தின் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த படத்தை கேவிஎன் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த இடத்தை ஹெச் வினோத் இயக்குகிறார். இது விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி என்றாலும் இதுவே கடைசி படம் என்று கவலையில் இருக்கிறார்கள். இதனால் விஜய் குறித்து அவ்வப்போது தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்தவகையில் விஜய்க்கும் சங்கீதாவும் கடந்த 1999 ஆம் வருடம் திருமணம் நடைபெற்ற நிலையில் நடிகர் விஜய் தன்னுடைய மனைவி சங்கீதாவோடு பைக்கில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.