LATEST NEWS
நீங்க அழகா இருக்கீங்க….! பிக் பாஸ் நடிகையை புகழ்ந்த விஜய்….! யார் அவர்கள் தெரியுமா…..!!!

பிக் பாஸ் நடிகையான சம்யுக்தாவின் அழகை நடிகர் விஜய் பாராட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னாடி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் இவர் ரசிகர்களால் இளைய தளபதி என்று அழைக்கப்படுகிறார். இவரின் நடிப்பில் உருவாகும் திரைப்படத்தை ரசிகர்கள் பண்டிகை போல கொண்டாடுவார்கள் . சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் அந்த அளவுக்கு வரவேற்பை பெறாத நிலையில் தற்போது வம்சி இயக்கத்தில் வெளியாக இருக்கும் வாரிசு திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கின்றார். அவர் மட்டும் இல்லாமல் சரத்குமார், பிரபு ,ஸ்ரீகாந்த், ஷாம், உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் நடித்து வருகிறார்கள் பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றது . இந்த திரைப்படம் வரும் 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது .
இப்படத்தில் விஜயுடன் முதல் முறையாக பிக் பாஸ் நடிகை சம்யுக்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் .படப்பிடிப்பின் போது நடிகை சம்யுக்தாவை அழகாக உள்ளீர்கள் என்று நடிகர் விஜய் கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விஜய் சார் ரொம்ப பாசிட்டிவிட்டியான மனிதர் என்று சம்யுக்தா அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது பேசியுள்ளார். இந்த செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.