CINEMA
சும்மா அதிருதில்ல…! 18 மில்லியன் வியூஸ்…. YouTube-ஐ அலறவிட்ட தளபதி ரசிகர்கள்…!!!

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் G.O.A.T திரைப்படத்தின் ட்ரெய்லர் நேற்று மாலை வெளியாகியுள்ளது. இதில் மாஸான என்ட்ரி கொடுக்கும் விஜய், வித்தியாசமான கெட்டப்பில் அசத்தி இருக்கிறார். இந்நிலையில் ‘தி கோட்’ படத்தின் ட்ரெய்லர் யூடியூப் தளத்தில் ரிலீஸான 15 மணி நேரத்திற்குள்ளாகவே 18 மில்லியன் வியூஸ்களைக் கடந்துள்ளது.
ஆக்ஷன், சென்டிமெண்ட், காமெடி என்று மசாலா ஸ்டைலில் உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தின் ட்ரெய்லரானது இணையத்தில் செம வைரலாகி வருகிறது. “அண்ணே வரார் வழிவிடு” போன்ற பல டயலாக்கு மற்றும் யுவன் சங்கர் ராஜாவின் BGM ஆகியவற்றை விஜய்யின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.