CINEMA
கார்த்தியின் கைதி-2 படம் எப்போது தொடங்கும்…? வெளியான ,முக்கிய தகவல்…!!

நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான திரைப்படம் கைதி. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன. வசூல் ரீதியாக பிரமாண்ட வெற்றிபெற்ற ‘கைதி’ படம் வெளிவந்தபோதே அதன் 2ஆம் பாகம் உருவாகும் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அறிவித்திருந்தார்.
ஆனால், அவர் தொடர்ந்து விஜயின் மாஸ்டர், கமலின் விக்ரம், லியோ, கூலி போன்ற படங்களை இயக்குவதில் தான் பிசியாக இருந்தார். இதனால் ‘கைதி-2’ படம் எடுப்பதில் தாமதம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.