LATEST NEWS
அடடே சூப்பர்…. பிக்பாஸில் இருந்து வெளியேறிய ஜனனிக்கு அடித்த ஜாக்பாட்…. ரசிகர்கள் வாழ்த்து….!!!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது 90 நாட்களைக் கடந்த விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் இலங்கையை சேர்ந்த ஜனனி. ஆரம்பத்தில் இவரின் நடவடிக்கைகள் ரசிகர்களை கவரும் விதமாக இருந்ததால் ஏராளமானோர் ஜனனியை ஆதரித்தனர். ஆனால் போகப் போக இவர் விளையாட்டில் அதிக அளவு ஆர்வம் காட்டாததால் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் ஜனனி தற்போது பூர்விகா மொபைல் விளம்பரத்தில் நடித்துள்ளார். அதனால் ஜனனிக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இவருக்கு விரைவில் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது.