அடப்பாவி..! கை, கால்களைக் கட்டி வாயில் துணி வைத்து அமுக்கி… தண்ணீருக்குள் சடலமாக கிடந்த 6 வயது சிறுமி… பாதுகாப்பு காவலர் மீது வந்த சந்தேகம்… நாட்டையே உலுக்கிய சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

அடப்பாவி..! கை, கால்களைக் கட்டி வாயில் துணி வைத்து அமுக்கி… தண்ணீருக்குள் சடலமாக கிடந்த 6 வயது சிறுமி… பாதுகாப்பு காவலர் மீது வந்த சந்தேகம்… நாட்டையே உலுக்கிய சம்பவம்..!!

Published

on

தெலுங்கானா மாநிலம் சிக்கந்தராபாத்தில் காணாமல் போன 6 வயது சிறுமி அருலியா மோசஸ், அவர் வசித்த அடுக்குமாடி குடியிருப்பின் கிளப் ஹவுஸ் அடித்தளத்தில் உள்ள தண்ணீருக்குள் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடத்தல் மற்றும் கொலை வழக்காகப் பதியப்பட்டுள்ள இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் கொடூரக் கொலையில் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் பாதுகாப்பு காவலராகப் பணியாற்றிய விக்ரம் என்பவரின் மீது போலீசாருக்கு பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவர் சிறுமியின் தந்தையிடம் ₹20 லட்சம் பிணைத்தொகை கேட்டதாகக் கூறப்படும் நிலையில், போலீசாரிடம் மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில் சிறுமியின் கை, கால்களைக் கட்டி, வாயில் துணியை திணித்து கொலை செய்து தண்ணீருக்குள் வீசியிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Advertisement

தற்போது தலைமறைவாக உள்ள முக்கியக் குற்றவாளியான விக்ரமைப் பிடிக்க மல்காஜ்கிரி மண்டல போலீசார் ட்ரோன் மற்றும் பிரத்யேகக் குழுக்களை அமைத்து தீவிரமாகத் தேடி வருகின்றனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் வேறு இரண்டு நபர்களைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், சிறுமியின் உடற்கூறாய்வு அறிக்கைக்காகக் காத்திருக்கின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in