“செல்ஃபி மோகத்தால் வந்த வினை.. நீர்வீழ்ச்சியில் கால் நழுவி உருண்ட வாலிபன்.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்… இணையத்தில் வைரலாகும் திகில் வீடியோ..!!” – cinefeeds
Connect with us

LATEST NEWS

“செல்ஃபி மோகத்தால் வந்த வினை.. நீர்வீழ்ச்சியில் கால் நழுவி உருண்ட வாலிபன்.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்… இணையத்தில் வைரலாகும் திகில் வீடியோ..!!”

Published

on

மால்ஷேஜ் காட் அருகே உள்ள காலு நீர்வீழ்ச்சிப் பகுதியில், இளைஞர் ஒருவர் செல்ஃபி எடுப்பதற்காக ஆபத்தான பகுதிக்குச் சென்றபோது எதிர்பாராதவிதமாக அவரது கால் நழுவி, ஆழமான பள்ளத்தாக்கை நோக்கி உருண்டு செல்லத் தொடங்கினார். கடைசி நொடியில், அதிர்ஷ்டவசமாக அங்கிருந்த ஒரு பாறை இடுக்கில் அவரது கை சிக்கிக்கொண்டதால், பள்ளத்தாக்கின் அடியில் சீறிப்பாயும் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படாமல் தப்பினார். இந்த நெஞ்சை பதறவைக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

मलशेज घाट के पास कालू झरने पर एक लड़का सेल्फी लेने गया। पैर फिसला और वो गहरी घाटी की तरफ लुढ़कने लगा। आखिरी पल में एक पत्थर से उसका हाथ अटक गया, वरना सीधा धारा में समा जाता।

वहाँ मौजूद लोगों और Tourists ने तुरंत साड़ी और कपड़ों से रस्सी बनाई। खतरे के बीच पहुँचकर उसे सुरक्षित… pic.twitter.com/bC8ZWf7Brx— Mandeep RajBhar (@MandeepRajBhar9) August 7, 2026

இதைக் கண்ட அங்கிருந்த சுற்றுலாப் பயணிகளும் உள்ளூர் மக்களும் சிறிதும் தாமதிக்காமல், தங்களிடம் இருந்த புடவைகள் மற்றும் துணிகளை ஒன்றோடு ஒன்று கட்டி நீண்ட கயிறாக மாற்றினர். உயிரைப் பணயம் வைத்து பள்ளத்தாக்கின் விளிம்பிற்குச் சென்று, பாறையைப் பிடித்துக்கொண்டிருந்த இளைஞரைப் பத்திரமாக மேலே இழுத்து மீட்டனர். சில நொடிகள் காட்டிய அலட்சியம் பேர அசம்பாவிதமாக மாறியிருக்கும் என்பதால், விலைமதிப்பற்ற உயிரை ஒரு செல்ஃபிக்காக ஆபத்தில் பணயம் வைக்காதீர்கள் எனச் சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in