குழந்தை பெற்றெடுத்த பின்னரும் வயிற்றுவலியால் துடித்த இளம்பெண்! ஸ்கேன் செய்து பார்த்த போது காத்திருந்த அதிர்ச்சி – cinefeeds
Connect with us

Uncategorized

குழந்தை பெற்றெடுத்த பின்னரும் வயிற்றுவலியால் துடித்த இளம்பெண்! ஸ்கேன் செய்து பார்த்த போது காத்திருந்த அதிர்ச்சி

Published

on

தமிழகத்தில் பிரசவத்துக்காக அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்ற தனது மனைவியின் கருப்பையில் மருத்துவர் பஞ்சை வைத்து அனுப்பிவிட்டதாக கணவன் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கூடலூர் மந்தையம்மன் கோவில் தெருவை சேர்ந்த விவசாய கூலித் தொழிலாளி வாஞ்சிநாதன். இவர் தனது மனைவி முத்துச்செல்வியை மூன்றாவது பிரசவத்துக்காக கடந்த மாதம் 23 ஆம் திகதி கூடலூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு காரில் அழைத்து சென்றுள்ளார்.

மருத்துவமனையை அடைந்தபோது காரிலேயே முத்துச்செல்விக்கு பெண் குழந்தை பிறந்தது. தொப்புள் கொடியை வெட்டி செவிலியர்கள் முதலுதவி செய்த நிலையில், முத்துச்செல்வியை, பெண் மருத்துவர் பரிசோதித்துள்ளார். அப்போது அலட்சியமாக நடந்து கொண்டதோடு, தகாத வார்தைகாளால் திட்டவும் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கருப்பையை சுத்தம் செய்த பெண் மருத்துவர், அதில் பஞ்சை கவனக் குறைவாக வைத்து அனுப்பியுள்ளார். இந்நிலையில், மீண்டும் முத்துச்செல்வி வலியால் துடித்துள்ளார். உடனே அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று ஸ்கேன் பரிசோதனை செய்து பார்த்த போது.

Advertisement

கருப்பையில் பஞ்சு இருப்பதை கண்டு மருத்துவர்கள் அதிர்ந்தனர். இந்நிலையில், கவனம் இல்லாமல் அஜாக்கிரதையாக செயல்பட்ட பெண் மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பாதிக்கப்பட்ட முத்துச்செல்வியின் கணவர் வாஞ்சிநாதன் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in