நள்ளிரவில் கழிவறைக்கு சென்ற மனைவி..! – பின்பு கேட்ட அலறல் சத்தம்..! – பதறிஅடித்துக்கொண்டு ஓடிய கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி..! – cinefeeds
Connect with us

Uncategorized

நள்ளிரவில் கழிவறைக்கு சென்ற மனைவி..! – பின்பு கேட்ட அலறல் சத்தம்..! – பதறிஅடித்துக்கொண்டு ஓடிய கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

Published

on

சென்னை கண்ணகி நகரில் வசித்து வருபவர் சுந்தரராஜன். இவரது மனைவி ஆதிலட்சுமி. இவர்களுக்கு சித்ரா, சிந்துதேவி என்ற இரு மகள்கள் உள்ளனர். கடந்த நாளில் நள்ளிரவு 1:30 மணியளவில் வெளியே நாய் குரைக்கும் சத்தம் கேட்டுள்ளது. உடனே தூங்கிக்கொண்டிருந்த சுந்தரராஜனும், ஆதிலட்சுமியும் எழுத்து வெளியே வந்துள்ளனர். 

அப்போது வடமாநில இளைஞர்கள் சிலர் கையில் கம்புடன் எதையோ தேடிக்கொண்டு இருந்துள்ளனர். உடனே சுந்தரராஜன் அவர்களிடம் சென்று விசாரித்துள்ளார். அப்போது நல்லபாம்பு ஒன்று இப்பகுதியில் சென்றதாகவும், அதை தேடிக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். உடனே சுந்தரராஜனும் கையில் கம்பு ஒன்றை எடுத்துக்கொண்டு தேட ஆரம்பித்துள்ளார். நீண்ட நேரமாக தேடியும் பாம்பு தென்படாததால், மனைவியை வீட்டிற்கு செல்லும்படி கூறிவிட்டு சுந்தரராஜன் மீண்டும் தேட ஆரம்பித்துள்ளார்.

Advertisement

இந்த சமயத்தில் ஆதிலட்சுமி கழிவறைக்கு சென்றுவிட்டு வெளியே வந்துள்ளார். அப்போது கழிவறைக்கு வெளியே இருந்த நல்லபாம்பை ஆதிலட்சுமி கவனிக்காமல் வந்துள்ளார். உடனே பாம்பு ஆதிலட்சுமியின் காலில் கொத்தியது மட்டுமில்லாமல் அவரது காலை சுற்றுக்கொண்டு இருந்துள்ளது. இதைத்தொடர்ந்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே அவரது உயிர் பிரிந்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in