Uncategorized
வற ண்டு போனது மனிதநேயம்..! – இந்த ஒற்றைப்படமே அதற்க்கு சாட்சி..!
‘மனம் இருந்தால் புளிய மரத்தின் இலையில் கூட இருவர் அமரலாம்’ என்பது பழமொழி. ஆனால் இன்று காலமாற்றத்திலும், நாகரீகம் என்னும் பெயரிலும் மனிதநேயம் கா வு கொடுக்கப்பட்டு வருகிறது. அதற்கு இந்த ஒற்றைப் புகைப்படமே சாட்சி. ‘ஆடு மாடு மேல உள்ள பாசம்…வீட்டு ரேசன் கார்டில் பேரை சேர்க்க கேட்கும்..” என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் திரைப்பட பாடல் வரியை போலத்தான் தமிழர்களின் வாழ்வு. அன்பு என்றால் அனைத்தையும் கொடுக்கும் கர்ணனாக மா றிவி டுவார்கள்.
ஆனால் அப்படி அன்பு நிறைந்த மனிதர்களின் மண்ணில் இப்படியும் சில சம்பவங்கள் நடந்து தான் வருகிறது. உணவு, உடை வரிசையில் அடிப்படைத் தேவைகளில் ஒன்றாக இருக்கிறது உறைவிடம். வீடு இல்லாத பலருக்கும் இரவு நேரங்களில் நடை பூட்டியிருக்கும் கடைகளின் வாசல் படிகள் தான் உறைவிடம். இது அந்த கடைக்காரர்களுக்கும் தெரியும். இன்னும் சில முதலாளிகள் இவர்களுக்கு இரவில் கொசுக்க டியில் இருந்து தப்பிக்க கொசு வர்த்தி கூட வாங்கிக் கொடுப்பார்கள்.
இங்கே இந்த புகைப்படத்தைப் பாருங்கள். யாரோ ஒருவரது கடை இது. கடை வாசலில் படிக்கட்டுகளில் கம்பி மு ள்கள் அமைத்து பூட்டு போட்டு பூட்டியுள்ளார். இதனால் மற்றவர்கள் யாரும் வாசலில் அமர்ந்து, இரவு படுக்கவோ முடியாது. காலையில் அவர் கடையை திறக்கும் போது, பூட்டைத் திறந்து வாசலில் இருக்கும் மு ள்வே லி போன்ற கம்பி படியை தனியாக அகற்றிவிட்டு உள்ளே செல்கிறார். மனிதநேயம் எங்கே சென்று விட்டது பார்த்தீர்களா?
