TRENDING
குறுகிய சுவர்களுக்குள் மாட்டிக்கொண்ட சிறுவனின் பரிதாப நிலை ..??நீண்ட நேரம் பிறகு தீயணைப்பித்துறையின் சாகசம் ..!!

12 வயது சிறுவன் 2 மணி நேர போராட்டத்திற்கு பின்பு பத்திரமாக மீட்டு எடுக்க பட்டான் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் . செங்குன்றத்தை அடுத்த முண்டியம்மன்நகர் அசோக் தெருவில் வசிப்பவர் தான் மணிகண்டன். இவரின் மகன் நித்தீஷ்(12). இவன் 7 ஆம் வகுப்பு படித்து வருகிறான் . அரையாண்டு விடுமுறை விட்டதால் நேற்று தன் தெருவில் உள்ள நண்பர்களுடன் விளையாடி கொண்டு இருந்துள்ளான் . அப்பொழுது ஓடிப்பிடித்து விளையாடி கொண்டு இருந்த நிதிஷ் தனது வீடு மற்றும் பக்கத்து வீட்டிற்கும் நடுவில் மிகவும் குறுகலான சந்து ஒன்று உள்ளது . அந்த சந்துவில் ஆள் யாரும் நுழைய முடியாது .
ஆனால் நேற்று விளையாடி கொண்டு இருந்த நிதிஷ் அந்த குறுகிய சந்தில் நுழைந்து வெளிய வர முயற்சி பண்ணும் நேரத்தில் எக்கு தப்பாக மாட்டிக்கொண்டான் அவன் எவ்வளவோ முயற்சித்து பார்த்தும் வெளியே வர முடியாததால் கூச்சலிட்டு அழத்தொடங்கினான் அந்த கதறல் சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் மற்றும் பெற்றோர் அங்கு வந்து அவனை வெளியே எடுக்க எவ்வளவோ முயற்சித்தனர் வெகு நேராம் ஆகியும் அவர்களால் அவனை வெளியே எடுக்க முடியவில்லை.
அதனால் அவர்கள் தீயணைப்பு வீரர்களை உதவிக்கு அழைத்து பின் தீயணைப்பு வீரர்கள் குறுகிய சந்தின் ஒரு பக்கத்தில் லேசாக இடித்து அந்த சிறுவனின் மேல் ஆடையை கத்திரிகோல் கொண்டு கிழித்து பின்பு அவனுக்கு காயம் படாதவாறு வெளியே எடுத்தனர் சிறுவனை . இதற்கு 2 மணிநேரம் முயற்சிகள் எடுத்தனர் தீயணைப்பு துறையினர். பின்பு மயங்கிய நிலையில் இருந்த சிறுவன் நிதிஷுக்கு முதலவுதவி செய்து தற்பொழுது அவன் நலமாக உள்ளன . சிறுவனை காப்பாற்றிய தீயணைப்பு வீரர்களுக்கு பொது மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.