CINEMA
“தங்கலான்” முழுக்க முழுக்க விருதுக்கான படம்…. விக்ரமிற்கு தேசிய விருது Conform…. படம் பார்த்ததும் புகழ்ந்த பிரபலம்…!!

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் இன்று உலக அளவில் வெளியான திரைப்படம் தங்கலான். இந்த படத்தை ஞானவேல் ராஜா தயாரித்துள்ளா.ர் பெரிதும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். ஏராளமான எதிர்பார்ப்பு இந்த படத்தின் மீது இருந்த நிலையில் இன்று இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கூறும் விமர்சனங்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் செய்யாறு பாலு படம் பார்த்துவிட்டு அளித்துள்ள பேட்டியில், படம் அருமையாக இருந்தது. ஜிவி பிரகாஷின் பின்னணி இசை அவ்வளவு அருமையாக இருந்தது. இந்த படம் வெளியாவதற்கு முன்பே ஆஸ்கர் விருது, கேன்ஸ் விழாவிற்கெல்லாம் செல்லும் என்று தங்கலான் படக்குழு ஆரம்பத்திலிருந்தே சொன்னார்கள். அதேபோல படம் பார்த்த பிறகு தான் தெரிகிறது இந்த படம் முழுக்க முழுக்க விருதுக்கான படம். இந்த படத்தில் விக்ரமிற்கு தேசிய விருது கன்பார்மாக கிடைக்கும் என்று கூறியுள்ளார்.