TRENDING
“மகளை காப்பாற்ற தாய் “,”தாயை காப்பாற்ற தோழி ” .. நீச்சல் தெரியாமல் பரிதவிப்பு .. கடைசியில் நடந்த கொடூரம் ..

தென்காசி மாவட்டம் புனையூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அழகு . இவரது மனைவி இந்திரா . இவர்களுக்கு 2 பிள்ளைகள் . அதில் மூத்த மகள் சுமித்ராவுடன் தாய் இந்திரா குளத்தில் குளிக்க சென்றுவுள்ளனர். இவர்களுடன் பக்கத்துக்கு வீட்டு பெண் செல்வி என்கிறவரும் குளிக்க சென்று உள்ளனர். அப்பொழுது எதிர்பாராத விதமாக 11 வயது மகள் சுமித்ரா குளத்தின் ஆழமான பகுதிக்குள் சென்று விட்டு தவித்து கொண்டு இருந்தால் அதனை பார்த்த தாய் இந்திரா மகளை காப்பாற்ற அவரும் குளத்தில் குதித்து உள்ளார்.
இருவருக்கும் நீச்சல் தெரியாததால் இருவரும் தவித்து கொண்டு இருந்தனர். இவர்கள் தவிப்பதை பார்த்த 28 வயது செல்வி அருகில் இருந்த வயலில் வேலை செய்தவர்களை உதவிக்கு அழைத்து கத்திக்கொண்டு இருந்தால் . ஆனால் அவர்கள் வருவதற்குள் இவர்களின் பரிதவிப்பை பார்த்து கொண்டு இருந்த செல்வியும் குளத்தில் குதித்து விட்டால் . பாவம் செல்விக்கும் நீச்சல் தெரியாது.
வயலில் வேலை செய்பவர்கள் வருவதற்கு முன் 3 பேரும் குளத்திலேயே மூச்சி திணறி உயிர் இழந்து உள்ளனர். சம்பவம் அறிந்து வந்த போலீசார்கள் உடல்களை மீட்டு பிரேதபரிசோதனை செய்ய உடல் அனுப்பிவைக்க பட்டுள்ளது. ஒரே இடத்தில் 3 பேர் இழந்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.