VIDEOS
முந்தானை முடிச்சு படத்தில் வரும் சிறுவர்கள் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?… ஆள் அடையாளம் தெரியாம வளர்ந்துட்டாங்களே..!!

கடந்த 1983 ஆம் ஆண்டு பாக்யராஜ் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் முந்தானை முடிச்சு. தமிழ் சினிமாவில் இயக்குனர் மற்றும் நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் பாக்கியராஜ் தன்னுடைய சினிமா வாழ்க்கையில் பல வெற்றி திரைப்படங்களை தந்துள்ளார். அதன்படி அவரே இயக்கி அவரே நடித்த படங்களில் சூப்பர் ஹிட் கொடுத்த திரைப்படம் தான் முந்தானை முடிச்சு. குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களுமே கிராமத்து கதைக்களத்தை வைத்து உருவாகி இருந்ததால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஊர்வசி நடித்த நிலையில் கிராமத்திற்கு வாத்தியாராக கைக்குழந்தையுடன் வரும் பாக்கியராஜ் அதே கிராமத்தில் குசும்புக்கார பெண்ணாக ஊர்வசி சின்ன பசங்களுடன் சுற்றிவரும் நிலையில் ஊர்வசி பாக்யராஜை திருமணம் செய்து கொள்வார். இவ்வாறு கதை அம்சம் உள்ள இந்த திரைப்படத்தை ஏவிஎம் தயாரிப்பில் பாக்கியராஜ் நடித்திருந்தார்.
இந்த திரைப்படம் கடந்த 1983 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்த நிலையில் இந்த திரைப்படத்தில் மூன்று சிறுவர்கள் ஊர்வசியுடன் நடித்திருப்பார்கள். தற்போது பல வருடங்கள் கழித்து அவர்கள் பாக்யராஜுடன் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில் அது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.