தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை கஸ்தூரி. இவர் தமிழ் மட்டுமல்லாமல் பல தென்னிந்திய மொழி படங்களில் நடித்துள்ளார். அதேசமயம் 1992 ஆம் ஆண்டு மிஸ் மெட்ராஸ் அழகி போட்டியில் கலந்து கொண்டு பட்டம் வென்றார்.

இவரின் நடிப்பில் வெளியான ஆத்தா உன் கோவிலிலே,செந்தமிழ் பாட்டு மற்றும் ராசாத்தி வரும் நாள் உள்ளிட்ட பல திரைப்படங்கள் இன்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளன. இப்படி சினிமாவில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இவர் சக்கரவர்த்தி என்ற திரைப்படத்தின் மூலம் மலையாளத்தில் கால் பதித்துள்ளார்.

அதே சமயம் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். இதனிடையே சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம். இவர் கடந்த 2000 ஆம் ஆண்டு ரவிக்குமார் என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்டார்.

தற்போது இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் அவர்கள் இருவரும் வெளிநாட்டில் படித்து வருகின்றனர். மகன் மற்றும் மகளை கிடைக்கும் நேரத்தில் கஸ்தூரி பார்க்கச் சென்று விடுவார். தற்போது அவரின் மகனின் பிறந்த நாளன்று வாழ்த்துக்கூறி மகனுடன் எடுத்த புகைப்படத்தை அவர் பகிர்ந்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.